9வயது சிறுவனை திருடியதாக கூறி வீட்டிற்குள் வைத்து பூட்டிய கடைக்காரர்-ஒட்டுமொத்தமாக திரண்ட பொதுமக்கள்

x

திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரியில், பெண் ஒருவர் நடத்தி வரும் மளிகை கடையில், அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் 20 ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்களை எடுத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அதற்கான பணம் சிறுவனிடம் இல்லாததால், கடை உரிமையாளர் அவனை வீட்டில் பூட்டி வைத்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த சிறுவனின் தாய்க்கும், கடை உரிமையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறுவன் அறியாமல் செய்ததாகவும், கடை உரிமையாளர் செய்தது தவறு எனக்கூறியும் பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததையடுத்து, சிறுவனை கடை உரிமையாளர் விடுவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்