பதறவைத்த பல்லடம் படுகொலை... முக்கிய குற்றவாளியை சுட்டுப்பிடித்த பெண் டிஎஸ்பி

x

பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் முக்கிய நபர்களான வெங்கடேசன் மற்றும் விஷால் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை எடுப்பதற்கு சம்பவ இடத்திற்கு வெங்கடேசனை போலீசார் அழைத்து சென்று இருக்கின்றனர். அப்போது இயற்கை உபாதை கழிப்பதற்காக அவரை போலீசார் அனுமதித்து உள்ளனர். அதனை பயன்படுத்தி வெங்கடேசன் தப்பி ஓடியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த டிஎஸ்பி சௌமியா தன்னுடைய துப்பாக்கியால் அவரது கால்களில் இரண்டு முறை சுட்டு பிடித்தார். காயமடைந்த வெங்கடேசனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். துணிச்சலாக செயல்பட்ட டிஎஸ்பி செளமியாவை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்