திருமணமான ஐந்தே மாதத்தில் இளைஞர் த*கொலை... வெளியான அதிர்ச்சி தகவல்
அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த சூர்யா என்ற இளைஞருக்கு, 5 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. ஆன்லைன் ஷேர் மார்க்கெட் பிசினஸ் செய்து வந்த சூர்யாவுக்கு, கடந்த சில மாதங்களாக பல லட்சங்கள் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன், மனைவியின் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகையை அடமானம் வைத்து ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்துள்ளார். அதிலும் இழப்பு ஏற்பட்டதால், மன உளைச்சலில் இருந்து வந்த சூர்யா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story