காரை நிறுத்திய போலீசாருக்கு ஷாக்.! தப்பிய நால்வர்... விரட்டிப்பிடித்த போலீஸ் - பரபரத்த சென்னை
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை திரவுபதி அம்மன் கோயில் அருகே அதிவேகமாக கார் ஒன்று வந்த நிலையில், அதை கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்... தப்பிச் சென்றவர்களை போலீசார் விரட்டிப் பிடித்த நிலையில், காரில் இருந்த நால்வரில் ஒருவர் தப்பி ஓடினார்... 3 பேரிடம் சோதனை செய்ததில், அவர்களிடம் சட்ட விரோதமாக 9 எம்.எம். கைத்துப்பாக்கி இருந்தது கண்டறியப்பட்டது... அவர்கள் திருவள்ளூர் அரண்வாயில் குப்பத்தைச் சேர்ந்த பிரவீன், நசரத்பேட்டையை சேர்ந்த சுனில், மேப்பூர் தாங்கலை சேர்ந்த நரேஷ்குமார் என்பதும், தப்பி ஓடியது நாகேந்திரன் என்பதும் கண்டறியப்பட்டது... நாகேந்திரனைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நசரத்பேட்டையில் பாஜக பிரமுகர் சங்கர் என்பவர் வெடிகுண்டு வீசி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் கவுன்சிலர் சாந்தகுமார் இவர்களிடம் கைத் துப்பாக்கியைக் கொடுத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...