கருணையே இல்லாமல் 3,500 வீடுகளை விழுங்கிய கோர வெள்ளம்
தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் ஏற்பட்ட உடைப்பை அடைக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் 150 இடங்களில் உள்ள குளங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றை சரி செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்துள்ள நிலையில், 175 சாலைகள் சேதம் அடைந்துள்ளதாகவும், பாதிப்புகள் குறித்து தொடர்ந்து கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஏரல் போன்ற பகுதிகளில் மின்சார இணைப்புக்கான பணிகளில் சுமார் 200 ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.
Next Story