சீலா மீன் போலவே இருக்கும்.. சாப்பிட்டால் நிச்சயம் ஆண்மைக்குறைவு, கேன்சர் வரும்.. கடைகளில் வாங்காதீர்
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் வாகன தணிக்கையின் போது 800 கிலோ ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பார்ப்பதற்கு சீலா மீன்களைப் போல இருக்கும் தேளி மீன்கள், விற்பனைக்கும், டேங்க் கிளீனர் மீன்கள் கருவாடாக மாற்றுவதற்கும் எடுத்து செல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட தேளி மீன்களை தற்போது ஊருக்கு வெளியே ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டி புதைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, தடை செய்யப்பட்ட மீன்களை சாப்பிட்டால் கேன்சர், தோல் நோய் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவை வரக்கூடும் என எச்சரித்தார்.
Next Story