தமிழக டிஜிபி சொன்ன ஒரு அதிர்ச்சி தகவல்

x

பொது இடங்களில் பாலியல் சீண்டலால் பாதிக்கப்படும் பெண்கள் பலர் புகார் அளிப்பதே இல்லை என தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்து இருக்கிறார்.

தமிழ்நாடு மகளிர் ஆணையம் மற்றும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் இணைந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தான ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தப்பட்டது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், அது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டது. வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 64 சதவீதமாக இருப்பதற்கு காரணம் அவர்களுக்கு அளிக்கப்படுகிற பாதுகாப்பு தான் என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் அமைப்பின் மாநில இயக்குநர் குரளமுதன் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரி, பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறினாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டும் தற்போது வரை பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து இறுதியாக பேசிய தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், பாதுகாப்பின் முதல் படி விழிப்புணர்வுடன் இருப்பது தான் என குறிப்பிட்டார். தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு குறித்து சென்னை மாநகராட்சி நடத்திய ஆய்வில் பொது இடங்களில் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகும் பெண்கள் பலர் புகார் அளிப்பதில்லை எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்