MLA மகன், மருமகளுக்கு கெடு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

சிறுமியை கொடுமைப்படுத்திய வழக்கில், திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகளை 2 வாரங்களில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் சிறுமி ஒருவர் வேலை பார்த்து வந்தார். அவரை துன்புறுத்தி கொடுமை செய்த‌தாக அளித்த புகாரின் அடிப்படையில், ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மெர்லினா ஆன் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும் நாளில், ஜாமின் மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று, உயர்நீதிமன்றத்தில், ஆண்டோ மதிவாண‌ன் அவரது மனைவி மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இரு வாரங்களில் சிறப்பு நீதிமன்றமான முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், அவர்கள் தாக்கல் செய்யும் ஜாமின் மனுவுக்கு பதிலளிக்குமாறு, காவல்துறைக்கும், பாதிக்கப்பட்ட பெண் தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் கேட்டு, விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று அமர்வு நீதிமன்றத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்