"உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யலாமா".. நகைக்கடையில் கைவரிசை காட்டிய ஊழியர்

x

தியாகராயநகர் உஸ்மான் சாலையில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையில், நந்தனத்தை சேர்ந்த பிரபீர் சேக் என்பவர் 20 வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்துள்ளார். ஆர்டரின் பேரில் தங்க கட்டிகளை பிரபீர் சேக்கிடம் கொடுத்தால் நகைகளாக செய்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நகைக்கடை அதிகாரிகள் பிரபீர் சேக்கிடம், தங்க இருப்பு குறித்து கேட்டபோது முன்னுக்குபின் முரணாக பதிலளிக்க, சந்தேகமடைந்த அதிகாரிகள், நகையை மதிப்பீடு செய்துள்ளனர். இதில், 2 கிலோ 46 கிராம் தங்கம் கையாடல் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாம்பலம் காவல் நிலையத்தில் நகைக்கடை நிறுவன பி.ஆர்.ஓ புகார் அளித்தார். அதன்படி, வழக்குபதிந்த போலீசார், பிரபீர் சேக்கை கைது செய்தனர். தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்திய போது, ரூபாய் ஒரு கோடிக்கும் மேலான வழக்கு என்பதால், மத்திய குற்றப்பிரிவுக்கு வழக்கை மாற்ற வேண்டும் எனக் கோரி பிரபீர் சேக்கை சிறையில் அடைக்காமல் விடுவித்தார். பின்னர் போலீசார் எழுதி வாங்கி கொண்டு பிரபீர் சேக்கை காவல் நிலைய ஜாமினில் விடுவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்