பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை வழக்கு - நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை வழக்கு - நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
#villupuram #thanthitv
பணியின் போது பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாசுக்கு விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில், இந்த வழக்கில் சரணடைவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்குமாறு ராஜேஸ் தாஸ் தரப்பில் சென்னை, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி முன்பு, ராஜேஸ் தாஸூக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவும், சரணடைவதில் இருந்து விலக்களிக்கவும் சிபிசிஐடி போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். காவல்துறையில் உயர் பதவி வகித்ததால் தனக்கு விலக்கு அளிக்க வேண்டுமென ராஜேஸ் தாஸ் கூறுவது ஏற்புடையதல்ல எனவும் சிபிசிஐடி போலீசார் வாதிட்ட நிலையில், தொடர்ந்து தனக்கு எதிராக சதி செய்யப்பட்டு பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ராஜேஸ் தாஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.