மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் - சிக்கிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி
திருச்சியில், மசாஜ் சென்டர் பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த விவகாரத்தில், தலைமறைவாக இருந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில், மசாஜ் சென்டர் பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியதாக, மேலாளர் லட்சுமி தேவி உட்பட 3 பெண்களை கைது போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மசாஜ் சென்டரின் உரிமையாளரும், தளபதி விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகியுமான செந்தில் என்பவரை, போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், 10 நாட்களாக தலைமறைவாக இருந்த செந்திலை, விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story