கெஜ்ரிவால் போல செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமின்..? - உச்ச நீதிமன்றத்தின் முடிவு என்ன..?

x

ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

பண மோசடி வழக்கில் ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஜாமின் மனுவை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம் 3 மாதங்களுக்கு விசாரணையை நிறைவு செய்ய உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர், மனுதாரருக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றார். இரு தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இன்றும் விசாரணை நடைபெறும் என்று அறிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்