சென்னை மக்களுக்கு செம்ம லக் - "வாகனம் நிறுத்த இனி அலைய வேண்டாம்"
சென்னை மாநகராட்சியில் 10 இடங்களில் பன்னடுக்கு வாகன நிறுத்த கட்டிடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதியில் வாகன நிறுத்தங்களை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களையும், பழுதாகி நிற்கும் வாகனங்களையும் அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டது. சென்னையில் 12 ஆயிரம் கார்கள் நிறுத்துவதற்கான வாகன நிறுத்துமிடங்கள் அடையாளம் காணப்பட்டாலும், 5 ஆயிரம் கார்கள் மட்டுமே நிறுத்த முடிகிறது. எனவே, பன்னடுக்கு வாகன நிறுத்த கட்டிடம் கட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னை மாநகரில் திருவொற்றியூர் நகராட்சி வணிக வளாகக் கட்டடம், அடையாறு இந்திரா நகர், 3ஆவது அவென்யூ சாலையில் உள்ள வணிக வளாகம் உள்பட 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்