பூமிக்கு அடியில்..100 அடி ஆழத்தில்..எழுந்தருளிய செல்லியம்மன்.. ``அம்மா.. தாயே''..சிலிர்த்த பக்தர்கள்
கடலூர் மாவட்டம் மருதூர் கிராமத்தில் நூறு அடி ஆழத்தில் இருந்து எழுந்தருளிய செல்லியம்மனை, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
கோவில் திருவிழாவையொட்டி, உதிரை வேங்கை மரத்திலான செல்லியம்மன் சிலையை, பூசாரிகள், 100 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி எடுத்து வந்தனர். நீரில் இருந்து வெளியே வந்த அம்மனை பார்த்ததும் உற்சாகம் அடைந்த பக்தர்கள், ஆரவாரம் செய்து அம்மனை தரிசனம் செய்தனர். விழா முடிந்ததும், மீண்டும் கிணற்றுக்குள் செல்லியம்மனை மங்கள் வாத்தியங்கள் முழங்க கிராம மக்கள் இறக்க உள்ளனர்.
Next Story