பா.ரஞ்சித் பெயரை சொன்னதும் சட்டென மாறிய முகம் - அடுத்த நொடியே அமைச்சர் சேகர்பாபு சொன்ன வார்த்தை
கரைந்து கொண்டிருக்கும் அதிமுக,, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகளால் காணாமல்போய்விடுமோ என்ற அச்சம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மேம்பாலம் அருகில் உள்ள பொதுப்பணித்துறை பழைய பணிமனை மற்றும் பழைய பொது பண்டகசாலையில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இதன்பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சேகர்பாபு, அம்மா உணவகத்தை மேம்படுத்த முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டி இருக்க வேண்டும் என்றார்.
Next Story