கடலில் நள்ளிரவில் திடீர் மாற்றம்...ஆக்ரோஷத்தை கண்டு நடுங்கிய மக்கள்-கோயிலையே உள்ளே இழுக்கும் கடல்?
வங்க கடலில் நள்ளிரவில் திடீர் மாற்றம்
ஆக்ரோஷத்தை கண்டு நடுங்கிய மக்கள்
கோயிலையே உள்ளே இழுக்கும் கடல்?
திக்திக் சம்பவம்...மிரளும் தென் தமிழகம்
வானிலையில் ஏற்பட்ட மாற்றம் கடலின் நண்பனாக அறியப்படும் மீனவர்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு
வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால்
கடந்த மூன்று நாட்களாகச் சென்னை உட்பட வட மாவட்டங்களில் உள்ள பொது மக்கள் பெரு மழை பயத்தில் அச்சத்துடன் இருக்கின்றனர்.
இந்த நிலையில் வானிலையில் ஏற்பட்ட மாற்றம் நெல்லை மாவட்டம் கடல் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் சீற்றமாக வெளிப்பட பல மீனவர்களின் வாழ்வாதாரங்களைக் கேள்விக் குறியாகி உள்ளன.
வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகக் கடலில் சீற்றம் அதிகமாக இருக்கும் எனவே மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்டம் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு ஏற்பட்ட கடல் சீற்றத்தின் காரணமாக உவரியை அடுத்துள்ள கூட்டப்பனை கிராமத்தின் கடற்கரை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டன.
சுதாரித்த மீனவர்கள் டிராக்டர்கள் மூலம் படகை மீட்டுள்ளனர்.
ஆனால் பல லட்சம் மதிப்புள்ள வலைகளை அலை இழுத்துச் சென்றதால் பலரும் பாதிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரங்கள் கேள்விக் குறியாகி உள்ளன.
இது மட்டுமல்லாமல் தாங்கள் வணங்கி வரும் மைக்கேல் ஆண்டவர் ஆலயமும் கடலுக்குள் சரிந்து விழும் அபாயத்தில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
உயிரைப் பணயம் வைத்து தினமும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களின் வாழ்வாதாரமான வலைகளை இழந்து இருப்பது
அவர்களை கவலையில்ஆழ்த்தி இருக்கிறது.