சென்னையில் திடீரென நீல நிறத்தில் மாறிய கடல்
சென்னை நீலாங்கரை கடற்கரையில், அதிகாலையில் திடீரென நீல நிறத்தில், கடல் அலைகள் மின்னிய அதிசயம் நிகழ்ந்துள்ளது. அந்தமான், கோவா உள்ளிட்ட கடல் பகுதியில் நிகழும் இந்த அதிசயம், நீலாங்கரை கடற்கரையிலும் நிகழ்ந்துள்ளது. அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை, நீல வண்ணத்தில் கடல் அலைகள் மின்னிய காட்சிகள் வெளியாகியுள்ளன. கடலில் உள்ள நீர்வாழ் உயிரினங்களான பாக்டீரியா, பூஞ்சை பூச்சிகள் ஆகியவற்றில் ஏற்படும் வேதியல் மாற்றம் காரணமாக இது ஏற்படுவதாக கூறப்படுகிறது.
Next Story