ராமேஸ்வரத்தில் கடல் சீற்றம்... ரூ.10 கோடி வரை வருவாய் இழப்பு

x

ராமேஸ்வரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மீன்பிடி தறைமுகத்தில் மீன்பிடி படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ஒரு நாளைக்கு 10 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதோடு நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்