மேம்பாலத்தில் இருந்து இறங்கும்போது அலறிய பயணிகள்.. சென்னையில் பரபரப்பு
பேருந்து ஜன்னல் கண்ணாடி உடைந்ததால் பாதிக்கப்பட்ட பயணி, பேருந்தில் இருந்த இறங்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை வள்ளலார் பேருந்து நிலையத்தில் இருந்து, அம்பத்தூர் கள்ளிகுப்பம் வரை சென்ற அரசு பேருந்தின் ஜன்னல் கண்ணாடி, பாடி மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கும் உடைந்தது. இதனால், கண்ணாடி துகள்கள் பயணிகள் மேல் சிதறியது. இதில் பாதிக்கப்பட்ட பயணி ஒருவர், பேருந்தில் இருந்து இறங்க மறுத்து, பணிமனையின் மேலாளர் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனக் கூறினார். அவருடன் பணிமனையில் இருந்த காவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும், அவர் இறங்க மறுத்துவிட்டார். இந்நிலையில், பேருந்து ஓட்டுநர், சம்பந்தப்பட்ட பயணியுடன் பணிமனைக்குள் பேருந்தை ஓட்டிச் சென்றார்.
Next Story