HM கொடுத்த பனிஷ்மெண்ட்.. மாணவிகளுக்கு நேர்ந்த சோகம்.. கதிகலங்கி தூக்கி ஓடிய பெற்றோர்

x

அரசு குருகுல பாடசாலையில் 200 தோப்புக்கரணம் போடச் சொன்ன தலைமை ஆசிரியையால் நடக்க முடியாமல் மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ரொம்ப சோடவரம் நகரில் உள்ள அரசு கிரிஜன மாணவிகள் குருகுல பாடசாலையில், விதிகளை பின்பற்றவில்லை எனக்கூறி, பள்ளியின் தலைமையாசிரியை மாணவிகளை 200 தோப்புக்கரணம் போட செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கால் தசைகளில் பிடிப்பு ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு விரைந்து வந்து தட்டிக்கேட்டனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்