வைரலான பள்ளி மாணவர்கள் புகைபிடிக்கும் வீடியோ - பள்ளிக்கே நேரில் சென்ற கலெக்டர்

x

வைரலான பள்ளி மாணவர்கள் புகைபிடிக்கும் வீடியோ - பள்ளிக்கே நேரில் சென்ற கலெக்டர்

மயிலாடுதுறை அரசு பள்ளி மாணவர்களிடம் புகையிலை குறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் சீருடை அணிந்தபடி அரசு பள்ளி மாணவர் புகை பிடிக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இந்த சூழலில், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்ற ஆட்சியர் மகாபாரதி, பொது வெளியில் நண்பர்கள் யாரெனும் புகைப்பிடித்தால் அதனை கண்டிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து பெற்றோருக்கு தகவல் அளிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்