சக மாணவன் தாக்கியதால் பறிபோன பார்வை.. ரூ.25 லட்சம் கேட்ட மாணவன் தாய்.. கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

x

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சக மாணவர் தாக்கியதில் பள்ளி மாணவனின் கண் பார்வை பாதித்ததற்கு 25 லட்ச ரூபாய் தமிழக அரசு இழப்பீடு வழங்கும்படி தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்த மாணவர் கல்லால் தாக்கியதில் சக மாணவரின் வலது கண் பார்வை பாதிக்கப்பட்டது. இதையடுத்து உரிய இழப்பீடு கேட்டு மாணவரின் தாயார் மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் தனி நீதிபதி, மனுதாரருக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும்படி தமிழக அரசின் கல்வித்துறைக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில், கல்வித்துறை அதிகாரிகளால்தான் இந்த சம்பவம் நடந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்