ஒட்டுமொத்த பள்ளிக்கல்வித் துறையையும் ஆடிப்போக வைத்த சர்க்குலர் - பரபரப்பு விளக்கம்
விநாயகர் சதுர்த்தி குறித்து தவறான சுற்றறிக்கை அனுப்பிய பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் 10 வகையான உறுதிமொழிகளை எடுக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டது சர்ச்சையானது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தவறான புரிதலின் அடிப்படையில் பள்ளிகளுக்கு விநாயகர் சதுர்த்தி குறித்து உறுதிமொழி சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இவை அரசின் ஆணைக்கு முரணானது என்பதால், அவை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தவறான சுற்றறிக்கை அனுப்பிய அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.