`இந்த' பாடத்திட்டத்தில் 10, 12 படித்திருந்தால் அரசு வேலைக்கு தகுதியில்லை

x

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவொளி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள அரசாணையின்படி, தேசிய திறந்த நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு முடித்திருந்தால், தமிழக அரசு பணிகளுக்கு தகுதியான சான்றிதழாக அவற்றை அங்கீகரிக்க

முடியாது என்று இதில் கூறப்பட்டுள்ளது. அதே போல, அரசு பணிகளில் பதவி உயர்வுக்கும் அந்த சான்றிதழ்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். எனவே அரசாணையை பின்பற்றி, அனைத்து கல்வி அலுவலர்களும் செயல்படுமாறு கேட்டுக் கொள்வதாகவும் அந்த சுற்றறிக்கையில் அறிவொளி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்