பள்ளி பேருந்து மோதி... தாய் கண்முன்னே தலை நசுங்கி பலியான 2 வயது சிறுமி.. கதறும் தாய்.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்

x

செங்கல்பட்டு மாவட்டம் தண்டலம் அருகே பள்ளி முடித்து திரும்பிய அண்ணனை அழைக்க தாயுடன் சென்ற இரண்டரை வயது பெண் குழந்தை, பள்ளி பேருந்து மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரியான் - ஜானகி தம்பதியின் 4 வயது மகன் ஜோயல், பள்ளி முடித்து பேருந்தில் வீடு திரும்பிய நிலையில், பேருந்தின் பின்பக்கமாக மகனை ஜானகி அழைத்து சென்றுள்ளார். அப்போது, தாயை தேடி சென்ற சிறுமி மீது பேருந்து ஏறியதில் நிகழ்விடத்திலேயே குழந்தை உயிரிழந்தது. தப்பியோடிய பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்