கழிப்பறை வசதி இல்லா பள்ளி - நீதிபதிகள் நேரில் ஆய்வு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, பள்ளியில் கழிப்பறை வசதி இல்லாததால் அருகே உள்ள கட்டிட கழிப்பறையை மாணவர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், அந்த பள்ளியில் நடுவர் மற்றும் குற்றவியல் நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
கரைப்புதூர் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 430 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் கட்டிடங்கள் ஒன்றாம் இரண்டாம் வகுப்பு கட்டிடங்கள் தனியாகவும் மூன்று முதல் ஐந்து வகுப்பு வரை உள்ள கட்டிடங்கள் தனியாகவும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள கட்டிடங்கள் தனியாகவும் செயல்பட்டு வருகின்றன. ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு கட்டிடத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு போதுமான கழிப்பறை வசதிகள் இல்லாததால், அந்த கட்டிடத்தில் பயிலும் குழந்தைகள் அருகே உள்ள பள்ளி கட்டிடத்திற்கு சென்று கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் சார்பு நீதிபதி செல்லதுரை மற்றும் குற்றவியல் நீதிபதி சித்ரா தேவி ஆகியோர், அந்த பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.