தனியார் ஓட்டலில் பள்ளி சத்துணவு முட்டை.. ஆய்வில் அதிர்ந்த அதிகாரிகள்.. - கோவத்தில் அதிரடி ஆக்ஷன்
சின்னசேலத்தில் தனியார் உணவகத்தில் இருந்து அரசால் வினியோகம் செய்யும் 90சத்துணவு முட்டைகள் பறிமுதல்; எட்டு கடைகளுக்கு 18 ஆயிரம் அபராதம் மற்றும் 14 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது உணவு பாதுகாப்புத் துறை மூலம்
சின்னசேலத்தில் அரசால் விநியோகம் செய்யப்படும் முட்டையை வாங்கி, உணவுப் பொருள் தயாரிப்பதற்காக சுமார் 90 முட்டைகள், அதிக செயற்கை நிறமூட்டிய கார வவைகள் மற்றும் பச்சை பட்டாணி, 7 கிலோ காலாவதியான உற்பத்தி தேதி குறிப்பிடாத ஆடுமனை பொருட்கள் 72 கிலோ, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் 13 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. 8 கடைகளுக்கு மொத்தமாக ரூ.18 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 14 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் உள்ள கடைகள், உணவகங்களில் காலாவதியான பொருட்கள், தரமற்ற உணவுகள் மற்றும் குளிர்பானங்கள் விற்கப்படுவதாக, மக்கள் குற்றம் சாட்டினர்.காலாவதியான பொருட்கள், தரமற்ற உணவுகள் மற்றும் ரசாயனம் கலந்த குளிர்பானங்கள் ஆகியவற்றின் தரம் குறித்து, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் சுகுந்தன் தலைமையிலான அதிகாரிகள், இன்று அப்பகுதியில் அதிரடியாக ஆய்வு செய்தனர்.
அப்போது, தனியார் உணவகம் ஒன்றில், உணவுப் பொருட்கள் தயாரிப்பதற்காக சத்துணவு முட்டைகள் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, 90 சத்துணவு முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், காலாவதியான பொருட்கள், தரமற்ற உணவுகள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த 8 கடைகளுக்கு மொத்தம் ரூ.18 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 14 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.இதுமட்டுமின்றி, தயாரிப்பு தேதி குறிப்பிடப்படாத கார வகைகள் 72 கிலோ பறிமுதல் செய்யப்பட்டதுடன், 13 கிலோ நெகிழி பொருட்களும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.