சவுக்கு சங்கருக்கு கிடைத்தது ஜாமின் | Savukku Shankar
கரூரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் யூடியூப் விளம்பரம் தொடர்பாக ஏழு லட்சம் ரூபாய் மோசடி செய்த விக்னேஷ் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த யூடியூப் நிறுவனம் சவுக்கு சங்கருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர், இன்று கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக ஆஜர் படுத்தப்பட்டார். சவுக்கு சங்கர் தரப்பில் இந்த வழக்கில்ஏற்கனவே ஜாமீன் கோரப்பட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story