சவுக்கு சங்கரின் ஜாமின் மனு..நீதிபதி போட்ட உத்தரவு | savukku shankar

x

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர் தாக்கல் செய்திருந்த மனுவை கோவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.பெண் காவலர்கள் குறித்தும், காவல்துறை உயர் அதிகாரிகள் குறித்தும் அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர், இணைய ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் ஆகியோர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர், கோவை நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை கடந்த 11-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்திருந்த நீதிபதி சரவணபாபு, 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். இந்த வழக்கை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி சரவணபாபு, சவுக்கு சங்கரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.


Next Story

மேலும் செய்திகள்