சவுக்கு சங்கர் வீடு, ஆபீஸில் 10 மணி நேரமாக நடந்த அதிரடி ரெய்டு..சிக்கிய பொருளால் ஷாக்கான அதிகாரிகள்

x

சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடில் சோதனை நடத்திய தேனி போலீசார், வீட்டில் இருந்து 2 லட்ச ரூபாய் பணம், கஞ்சா சிகரெட்டுகள், மடிக்கணினி, ஹார்ட் டிஸ்க் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில், தேனி அருகே கடந்த 4-ஆம் தேதி சவுக்கு சங்கரை கோவை போலீசார் கைது செய்தனர். அவருடைய காரில் கஞ்சா இருந்த நிலையில், இதுகுறித்து கோவை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, சென்னை மதுரவாயலில் சவுக்கு சங்கர் வீட்டிலும், தியாகராய நகரில் உள்ள அவருடைய அலுவலகத்திலும் தேனி போலீசார் சோதனை மேற்கொண்டனர். சவுக்கு சங்கரின் வீட்டில் வருவாய்த் துறையினர் முன்னிலையில் பூட்டு அகற்றப்பட்டு,10 மணி நேரம் சோதனை செய்தனர். அதில், வீட்டில் இருந்து 2 லட்ச ரூபாய் ரொக்கப் பணம், கஞ்சா சிகரெட்டுகள், கஞ்சா புகைக்க பயன்படும் உபகரணங்கள், மடிக்கணினி, ஹார்டு டிஸ்க் மற்றும் முக்கிய ஆவணங்களை அவர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.

இதனிடையே, வனிதா என்ற பெண் காவலர் அளித்த புகாரின் பேரில், சவுக்கு சங்கர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்