சாதாரண பெண் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்.. லட்சம் லட்சமாக குவிந்த பணம் - நூல் பிடித்ததில் அதிர்ச்சி
சாத்தூரில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ரூபாய் 70 லட்சம் மோசடி செய்த தற்காலிக பெண் ஊழியர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக ரேவதி என்பவர் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். அப்போது அவர் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் போலியான பயனாளிகளின் பெயரில் 70 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான ரேவதி மீது சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story