சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு...திருப்புமுனையாக அமைந்த சாட்சியம் | Thoothukudi Case | Tamilnadu

x

சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் கொலை வழக்கு, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி தமிழரசி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, பெனிக்ஸின் பக்கத்து கடைக்காரர் பிரபு, நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளித்தார். அப்போது, ஜெயராஜும், பெனிக்சும், போலீசார் விசாரணைக்கு அழைத்தபோது, எந்தவித பிரச்சனையும் செய்யாமல் காவல்நிலையம் சென்றதை தெளிவாக உறுதிப்படுத்தினார்.

சாத்தான்குளம் போலீசார் அழைத்தபோது, ஜெயராஜும், பெனிக்சும், கடை முன்பு உருண்டு பிரச்சனை செய்ததாக கூறி வந்த நிலையில், பிரபு அளித்த சாட்சியம் வழக்கில் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்