மனைவியிடம் தலைமை செயலாளர் பொறுப்பை ஒப்படைக்கும் IAS கணவன்.. ஹாட்ரிக் அடித்த இந்தியா

x

கேரள மாநில தலைமைச் செயலாளராக உள்ள வேணு ஓய்வு பெறுவதையொட்டி, அவரது மனைவியும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சாரதாவை தலைமைச் செயலாளராக கேரள அமைச்சரவை நியமித்துள்ளது. இதையொட்டி திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில், முதல்வர் பினராயி விஜயன் முன்னிலையில், தலைமை செயலாளர் வேணு, தனது மனைவி சாரதாவிடம் இன்று அந்தப் பொறுப்பை ஒப்படைக்கிறார். ஐ.ஏ.எஸ் அதிகாரியான சாரதா, மத்திய-மாநில அரசுகளின் பல துறைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். தற்போது கேரள அரசின் உள்ளாட்சி துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்து வருகிறார். கணவன், மனைவி அடுத்தடுத்து தலைமைச் செயலாளராக பதவி வகிப்பது, நாட்டில் இது 3வது முறையாகும். ஏற்கனவே மகாராஷ்ட்ரா, கர்நாடகாவில் இதுபோன்ற அபூர்வ நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்