தூய்மைப்பணியாளர் உயிரிழந்த வழக்கு... காவல் ஆய்வாளருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

சென்னை பம்மலை சேர்ந்த தூய்மை பணியாளரான மதியழகி என்பவர், கடந்த 2019ஆம் ஆண்டு நகராட்சிக்கு சொந்தமான வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனால் மனைவியின் மரணத்துக்கு இழப்பீடு கோரி, மதியழகியின் கணவர் நாகராஜ், சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. கடந்த ஓராண்டாக ஆஜராகாததால், அவருக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய 'வாரண்ட்' பிறப்பித்து, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்