பட்டப்பகலில் போலீஸ் செய்த பகீர் காரியம் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

x

சேலத்தில் லஞ்சம் வாங்கும்போது வீடியோ எடுத்த நபரை மிரட்டிய காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த ஆட்டையாம்பட்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராமன் தலைமையிலான போலீசார் தேங்காய் ஏற்றி சென்ற லாரி உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கி உள்ளனர். அதனை வீடியோ எடுத்த நபரை போலீஸ் வாகனத்தில் ஏற்றிய அவர்கள் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று மிரட்டி உள்ளனர். இந்த வீடியோக்கள் வைரலான நிலையில், சம்பந்தபட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் ராமன் மற்றும் தலைமை காவலர் ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி சேலம் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்