"எங்க பொண்ண கெட்ட வார்த்தையால திட்டுறாங்க" - மனமுடைந்த தந்தை

x

சேலத்தில், தற்கொலைக்கு முயற்சித்த மாணவிகளை பள்ளியில் சேர்க்க மறுப்பு தெரிவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாரமங்கலத்தை சேர்ந்த புஷ்பராஜ்-கும் தாமோதர சக்கரவர்த்தி, மாலதி ஆகியோருக்கும் இடையே தகராறு இருந்ததாக கூறப்படும் நிலையில், புஷ்பராஜின் மகள் மற்றும் அவரது தோழியை இருவரும் தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவிகள் இருவரும் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு, பின்னர் இதுதொடர்பாக புகாரும் அளிக்கப்பட்டது. இந்நிலையில், தற்கொலை முயற்சி மேற்கொண்ட மாணவிகளை, அசம்பாவிதம் ஏற்படும் என கருதி அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்