திடீர் போராட்டத்தில் குதித்த கம்யூனிஸ்ட் கட்சி - சேலத்தில் ஸ்தம்பித்த போக்குவரத்து
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலவச வீட்டுமனை பட்டா, சுடுகாட்டிற்கு செல்ல மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், 108 ஆம்புலன்ஸ் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.
Next Story