கைதியை வைத்து பெண் போலீஸ் அதிகாரி செய்த கொடூர சம்பவம்..? அதிர்ந்த CBCID

x

சிறைக்கைதியை சிறை அதிகாரிகள் வீட்டு வேலைக்கு பயன்படுத்தி கொடுமைப்படுத்திய விவகாரம் தொடர்பாக சேலம் மற்றும் வேலூர் சிறைகளில் சென்னை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

ஆயுள் தண்டனை கைதியான சிவக்குமார் என்பவரை காவல்துறை அதிகாரிகள் வீட்டு வேலைக்கு உபயோகப்படுத்தி, நகைகள் திருடியதாக தாக்கிய விவகாரத்தில் வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி உட்பட 14 பேர் மீது சிபிசிஐடி அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் இருந்து செல்லக்கூடிய சிபிசிஐடி விசாரணை அதிகாரிகள் சிறைச்சாலைகளில் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்