வீல் சேரில் முனைவர் பட்டம் வாங்க வந்த மாணவி... கை தட்டி வரவேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி
வீல் சேரில் முனைவர் பட்டம் வாங்க வந்த மாணவி... கை தட்டி வரவேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி
பெங்களுரை சேர்ந்த ரஜினி ஹெச் பிள்ளை என்ற மாணவி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், வணிகவியல் துறையில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டார். கடந்த ஜூன் மாதம் நடந்த கார் விபத்தில், 2 கால்களிலும் படுகாயம் அடைந்த அவர், பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 23-வது பட்டமளிப்பு விழாவில், வீல் சேரில் சென்று கலந்து கொண்ட ரஜினி ஹெச் பிள்ளை, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முனைவர் பட்டம் பெற்று மகிழ்ச்சியடைந்தார். நடக்க முடியாத சூழ்நிலையிலும், ஆளுநர் மற்றும் அமைச்சரிடம் பட்டம் வாங்க வேண்டும் என விரும்பியதாகவும், தனக்கு உறுதுணையாக இருந்த பல்கலைக்கழகத்திற்கு நன்றி கூறுவதாகவும் ரஜினி ஹெச் பிள்ளை தெரிவித்தார்.