ஆள்கடத்தல், பண மோசடி... பரிதாபமா சிக்கிய மருத்துவர்... சேலத்தை அதிர வைத்த போலி சிபிஐ
சேலம் கருங்கல்பட்டியை சேர்ந்த அரசு மருத்துவரை மர்மநபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு தன்னை சிபிஐ அதிகாரி எனக்கூறி மிரட்டல் விடுத்திருக்கிறார். மருத்துவரின் ஆதார் எண்ணை பயன்படுத்தி சிம் கார்டுகள் வாங்கப்பட்டிருப்பதாகவும், அந்த சிம் கார்டுகள் மூலம் ஆள்கடத்தல் மற்றும் பண மோசடிகள் அரங்கேற்றப்பட்டிருப்பதாக கூறிய அவர், இது தொடர்பான விசாரணைக்கு மருத்துவரின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டுப் பெற்று, 36 லட்ச ரூபாய் பணத்தை திருடியதாக கூறப்படுகிறது. இது குறித்து சேலம் சைபர் கிரைம் போலீசில் மருத்துவர் புகாரளித்திருக்கும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story