கலெக்டரின் திடீர் விசிட்... மாணவிகளுக்கு சர்ப்ரைஸ்... உணவுகளை ஆய்வு செய்து அதிரடி...

x

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, ஓமலூரில் உள்ள அரசு ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மாணவிகளுடன் கலந்துரையாடிய அவர், விடுதி சமையல் கூடம், மாணவிகள் அமரும் இடம், உறங்கும் இடம், ஆகியவற்றை பார்வையிட்டார். கழிவறை மற்றும் சுற்றுப்புறங்களையும் ஆய்வு செய்தார். பின்னர் மாணவிகளுக்கு சமைத்து வைத்திருந்த உணவை ருசி பார்த்து தரத்தை அறிந்தார். தொடர்ந்து மாணவிகளுடன் அமர்ந்து அவர்களின் வீட்டுப் பாடங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மாணவிகளுக்கு பாடமும் நடத்தி சந்தேகங்களை தெளிவுபடுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்