ஜவ்வரிசியால் பரபரப்பான சேலம்.. களமிறங்கிய அதிகாரிகள்.. தட்டி தூக்கிய தடை செய்யப்பட்ட பொருட்கள்

x

சித்தேரி பகுதியில் உள்ள தனியார் சேகோ ஆலையில், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர்கள் மற்றும் சேலம் சேகோ சர்வ் மோலாண்மை இயக்குனர் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஜவ்வரிசி தயாரிப்பில், தடை செய்யப்பட்ட கெமிக்கலை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தற்காலிகமாக சீல் வைத்த அதிகாரிகள், சுமார் 20 லட்சம் மதிப்பிலான 13 ஆயிரம் கிலோ சேகோ, 27ஆயிரம் லிட்டம் ஸ்டார்ச் மில்க், 7 ஆயிரத்து 200 கிலோ ஸ்டார்ச் மாவு, 120 லிட்டர் ஹைப்போ கெமிக்கலை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, உணவு மாதிரிகள் ஆய்வு அறிக்கையை பொருத்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்