காட்டுத்தனமாக அடித்த கனமழை.. பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்கள் | Thanthitv

x

சேர்வராயன் மலைத்தொடரில் பெய்த கனமழையால், கிழக்கு சரபங்கா ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக தொப்ளான்காடு, நாலுக்கால்பாலம் உள்ளிட்ட குக்கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பெரிய பெரிய மரங்களையும் அடித்துக்கொண்டு பாலத்தில் போட்டுள்ளது. வெள்ளம் காரணமாக பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் வீடு திரும்பினர். தனியார் மற்றும் அரசு ஊழியர்களும் வேலைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. விவசாய பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. போக்குவரத்தை சீரமைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிராமங்களில் மாற்றுப் பாதைகளில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வருவதற்கான வழிவகைகள் செய்து கொடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்