வெள்ளக்காடாக மாறிய சேலம்... "முக்கிய காரணமே இதுதான்.." - கொந்தளித்து மக்கள் எடுத்த முடிவு

x
  • சேலம் பிரபாத் பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிரபாத் அம்பேத்கர் நகரில் கனமழை காரணமாக மழைநீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் அவதி அடைந்த பொதுமக்கள், மாநகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல் துறை துணை ஆணையர் வேல்முருகனை முற்றுகையிட்டு அவர்கள் வாக்குவாதம் செய்தனர். சாக்கடை கால்வாய் பராமரிப்பு பணிகளை முறையாக செய்யாததால்தான் மழைநீர் ஊருக்குள் புகுந்ததாக கூறிய பொதுமக்கள், அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்