உடலை அடக்கம் செய்வதில் தகராறு...சடலத்துடன் மறியலில் இறங்கிய மக்கள் - சேலத்தில் பரபரப்பு
மேட்டூர் அடுத்த சத்யாநகர் பகுதியில், இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இங்கு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய கிழங்கு காவேரிபுரத்தில் ஒன்றரை ஏக்கர் மயானத்தில், இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்வது வழக்கம். அந்த வகையில், ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் ஒஜீர் என்பவர், வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது சடலத்தை அடக்கம் செய்ய கொண்டு வரும்போது, அந்தப் பகுதியில் வசிக்கும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்த சூழலில், சடலத்தை கொண்டு வந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதனால் மேட்டூர் மைசூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story