சேலம் மக்களை நடுங்கவிடும் பகீர் சம்பவம் "ரகசியமாக சொல்லுங்கள்.."அடுத்த சம்பவத்துக்கு ரெடியான போலீஸ்

x

சேலம் மாநகரில் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகம் உள்ளதாக பொதுமக்கள் பகிரங்க குற்றச்சாட்டு முன்வைத்ததன் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...

சேலம் முள்ளுவாடிகேட் பகுதியில் மாநகர காவல் நிலையம் சார்பாக காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கூட்டம் நடைபெற்றது.

இதில் சேலம் மாநகர காவல் உதவி ஆணையாளர் ஹரிசங்கரி கலந்துகொண்டு பொதுமக்களிடையே நேரடியாக குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது சேலம் டவுன் ரயில்வே நிலையும் பகுதியில் அதிகளவு போதை பொருட்கள் பயன்படுத்துவதாக பகுதி மக்கள் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சேலத்தில் இளைஞர்கள் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய சூழலில், சேலம் மாநகராட்சியில் பயன்படுத்தப்படாத பார்க்கிங்களில்

அதிகளவில் போதை ஊசிகள் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதாக கவலைத் தெரிவித்திருந்தனர்.

இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு, தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அதுதொடர்பாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனை பரிசீலித்த காவல்துறை தரப்பு, தங்களது பகுதிகளில் இளைஞர்களின் மாறுபட்ட செயல்பாடுகள், நடவடிக்கைகளுடன் தென்பட்டால் பொதுமக்கள் கண்காணித்து காவல்துறையினிடம் தெரிவிக்க வேண்டும் எனக்கூறியுள்ளது.

மேலும் இது தொடர்பாக தகவல் கொடுத்தால்போதும், ரகசியம் காக்கப்படும் என உறுதியளித்ததோடு, எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் தகவல் கொடுப்பவர்களுக்கு எந்த வித ஆபத்தும் வராது எனக்கூறியுள்ளனர்.

அண்மைக் காலமாக அதிகரித்து வரும் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்தால் போதும், முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்பது மக்களின் கருத்தாக உள்ளது..


Next Story

மேலும் செய்திகள்