பணம் கொடுக்க மறுத்ததால் பாட்டியை அடித்துக் கொன்ற பேரன் | Thanthitv

x

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள அம்மன்கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னியம்மாள். 85 வயதான இவர் தன் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுத்த நிலையில், கணவரை இழந்து தனியே வசித்து வந்திருக்கிறார். மேலும், தனக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில், ஆள்களை வைத்து விவசாய பணிகளை பொன்னியம்மாள் மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த 3 ஆம் தேதி முதல் மூதாட்டியை காணவில்லை என போலீசில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது. வழக்குபதிவு செய்து மூதாட்டியை தேடி வந்த போலீசார் , பொன்னியம்மாளின் பேரன் சித்துராஜை சங்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தனது நண்பர்களுடன் சேர்ந்து மூதாட்டியை சித்துராஜ் அடித்து கொன்றதும் , சடலத்தை பரமத்தி வேலூர் காவிரி ஆற்றில் வீசியதும் தெரிய வந்தது. தொழிலில் நஷ்டமடைந்ததால், மூதாட்டியிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்த சித்துராஜ், பணம் தர மறுத்த ஆத்திரத்தில் மூதாட்டியை கொன்றது தெரியவர, சித்துராஜுடன் சேர்ந்து அவரது நண்பர்கள் மூவரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். இறந்த பொன்னியம்மாள், ஓமலூர் அதிமுக எம்.எல்.ஏ மணியின் அத்தை என்பது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்