புரட்டி போட்ட ருத்ரதாண்டவ மழை.. தனி தீவாக மாறிய மேட்டூர் - மிதக்கும் வீடுகள்.. அதிர்ச்சியில் மக்கள்

x

மேட்டூரில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் சென்றதால் பொதுமக்கள் அவதி.

மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு கன மழை பெய்தது.இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சாலைகளின் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.மேலும் மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட 3-வது ஆஸ்பத்திரி காலனி, 18-வது வார்டு தூக்கனாம்பட்டி பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வீட்டிற்குள் இரண்டு அடி உயரதிற்கு தண்ணீர் தேங்கி நின்றது.

வீட்டிலிருந்த அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சேதம் அடைந்தது. மழைநீருடன் சேர்ந்து கழிவு நீரும் வீடுகளுக்குள் சென்றது இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை பொதுமக்கள் வாலி மூலம் வெளியேற்றி வருகின்றனர். மேட்டூர் நகராட்சியில் முறையான கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

தண்ணீரை அப்புறப்படுத்த நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்