தடையை மீறி பட்டப்பகலில் விற்பனை.. சேலத்தில் அதிர்ச்சி
மூங்கில்படி ஊராட்சி அருகே,சோரையான்காடு கரட்டு மேட்டில் பல ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கொல்லப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்த மாரியப்பன், இவரது அண்ணன் மகன் செல்லதுரை மற்றும் முத்துக்குமார் ஆகியோர் லாட்டரி சீட்டு அதிர்பர்களாக செயல்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. மூங்கில்பாடியை போலவே, கருப்பூர், தட்டாஞ்சாவடி, கோரிமேடு என சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கிளை அமைத்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த லாட்டரி விற்பனை, கரூப்பூர் காவல்நிலைய போலீசாருக்கு தெரிந்தே நடைபெறுவதாக குற்றம்சுமத்தப்பட்டிருக்கும் நிலையில், லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறும் வீடியோ தற்போது வெளியாகி பரவி வருகிறது.
Next Story