பார்சலுக்கு பணம் கேட்ட ஹோட்டல் ஓனர்.. உருட்டு கட்டையால் தாக்கிய `Home Guard' - அதிர்ச்சி காட்சிகள்
பார்சலுக்கு பணம் கேட்ட ஹோட்டல் ஓனர்.. உருட்டு கட்டையால் தாக்கிய `Home Guard' - அதிர்ச்சி காட்சிகள்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, பார்சல் வாங்கிய உணவிற்கு பணம் கேட்ட உணவகத்தின் உரிமையாரை உருட்டுக் கட்டையை காட்டி மிரட்டி, ஊர்க்காவல் படை வீரர், கடையை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உமா என்பவர், உணவகம் நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு வந்த பிரவீண் என்ற ஊர்க்காவல் படை வீரர், பார்சலில் உணவு வாங்கி விட்டு அதற்குரிய 300 ரூபாயை தர மறுத்துள்ளார். தான் காவல் துறையில் பணியாற்றுவதாக கூறி, உருட்டுக் கட்டையால் கடையில் இருந்த பொருட்களை உடைத்துளளார். சத்தம் கேட்டு வந்த உணவக உரிமையாளர் உமாவிடமும் பிரவீண் தகாத வார்த்தை பேசி வாக்குவாதம் செய்துள்ளார். அருகில் இருந்தவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, பிரவீண் அங்கிருந்து தப்பியோடி விட்டார். அவர் உணவகத்தில் தகராறு செய்த சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.